18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » மதுரையில் மனித கழிவுகளை மனிதர்களே அள்ளும் அவலம்..

மதுரையில் மனித கழிவுகளை மனிதர்களே அள்ளும் அவலம்..

எழுதியவர்: ஆசிரியர் May 26, 2019, 6:47 pm

மதுரை மாவட்டம் பைபாஸ் சாலை ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா அருகே உள்ள தனியார் உணவு விடுதியில் இருந்து வெளியேறும் கழிவுநீரை மனிதர்களே அள்ளி சாலையில் கொட்டும் அவலம் இன்று (26/05/2019) நடந்தேறியுள்ளது. இன்று சுமார் மாலை சுமார் 6 மணி அளவில் பைபாஸ் சாலையில் உணவு விடுதி அருகே உள்ள பெரும் குழியில் இருந்து கழிவுகளை மனிதர்களே அள்ளி கொண்டிருந்தது மிகவும் வேதனையாக இருந்தது.

மனிதக் கழிவுகளை மனிதர்களே அள்ளுவது சட்டப்படி குற்றம் என உச்சநீதிமன்றம் ஏற்கனவே உத்தரவிட்டுள்ளது. அதையும் மீறி எந்த வித பாதுகாப்பும் இல்லாமல் தொழிலாளர்களை இவ்வேலையில் ஈடுபடுத்தியது மட்டும் இல்லாமல், சாலையிலேயே கழிவுகளை கொட்டி அந்தப் பகுதி முழுவதும் துர்நாற்றத்துடன், சுகாதார கேடு ஏற்பட்டுள்ளது.  மேலும் இதனால்  நோய் தொற்று ஏற்படவும் வாய்ப்புகள் அதிகம் உள்ளதால் சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் மற்றும் பொது மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!