17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » தமிழ்நாடு அறிவியல் இயக்கம், Tamil Nadu Science Forum (TNSF) நிர்வாகிகள் தேர்வு..

தமிழ்நாடு அறிவியல் இயக்கம், Tamil Nadu Science Forum (TNSF) நிர்வாகிகள் தேர்வு..

எழுதியவர்: ஆசிரியர் May 26, 2019, 6:09 pm

தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின்  காட்பாடி ஒன்றிய புதிய நிர்வாகிகள் தேர்வு  செய்யப்பட்டனர். இதில்  ஒன்றிய தலைவராக செ.நா.ஜனார்த்தனன் தேர்வு செய்யப்பட்டார். தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் காட்பாடி ஒன்றிய ஆலோசனைக்குழு கூட்டம் காட்பாடியில் இன்று நடைபெற்றது. ஒன்றிய தலைவர் செ.நா.ஜனார்த்தனன் தலைமை தாங்கினார். முன்னதாக செயலாளர் ஆர்.ராதாகிருஷ்ணன் வரவேற்று பேசினார்.

காட்பாடி ஒன்றியத்தின் புதிய நிர்வாகிகள் தேர்வு நடைபெற்றது. மாநில அமைப்பின் முன்னாள் பொருளாளர் கு.செந்தமிழ்செல்வன் தேர்தல் அலுவலராக செயல்பட்டார். மாவட்ட துணைத்தலைவர் கா.விசுவநாதன், முன்னாள் மாவட்ட செயலாளர் பெ.ராமு பார்வையாளராக கலந்து கொண்டு பேசினர். பின்னர் புதிய நிர்வாகிகள் 2019 முதல் 2021வரை பதவிக் காலத்திற்கு பின்வரும் நிர்வாகிகள் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டனர். இதில் தலைவராக செ.நா.ஜனார்த்தனன்,  செயலாளர் ஆர்.ராதாகிருஷ்ணன், பொருளாளர் ஆர்.லோகநாதன் துணைத்தலைவர்களாக பி.பிரகாஷ், மற்றும் எஸ்.கலைவாணி,  இணைச்செயலாளர்களாக எஸ்.சசிகலா, மற்றும் எம்.ஈஸ்வரி ஆகியோர் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டதாக கு.செந்தமிழ்செல்வன் அறிவித்தார்.

கிளை உறுப்பினர்கள் எ.செந்தில்நாதன், பி.ஆனந்தன், பி.பிரியா, சுதாலட்சுமி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். பின்னர் பின்வரும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. – தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் சார்பில் நடைபெறும் இளம் அறிவியல் அறிஞர்களை ஊக்குவிக்கும் துளிர் மற்றும் குழந்தைகள் திருவிழாக்களை சிறப்பாக நடத்திட திட்டமிடுவது. – ஜுன் மாதம் ஒன்றிய அறிவியல் மாநாட்டினை நடத்துவது – அறிவியல் சிந்தனைகளை திட்டமிடுவது முடிவில் பொருளாளர் ஆர்.லோகநாதன் நன்றி கூறினார்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!