18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » நிலக்கோட்டை சட்டமன்ற உறுப்பினருக்கு அ.தி.மு.க.வினர் அமோக வரவேற்பு…

நிலக்கோட்டை சட்டமன்ற உறுப்பினருக்கு அ.தி.மு.க.வினர் அமோக வரவேற்பு…

எழுதியவர்: ஆசிரியர் May 26, 2019, 5:01 pm

திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை சட்டமன்ற தொகுதி உறுப்பினர் எஸ். தேன்மொழி சேகர் தற்போது நடந்த இடைத் தேர்தலில் வெற்றி பெற்றார்.  அதனைத் தொடர்ந்து சென்னை சென்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்தையும் நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றுவிட்டு நிலக்கோட்டை வந்தார்.    நிலக்கோட்டை வந்த நிலக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் எஸ். தேன்மொழி சேகருக்கு நிலக்கோட்டை அ.தி.மு.க ஒன்றிய செயலாளர் யாகப்பன்  தலைமையில் அமோக வரவேற்பளிக்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் ஒன்றிய துணைச் செயலாளர் நல்லதம்பி, நிலக்கோட்டை நகர செயலாளர் சேகர்,முன்னாள் ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவர் மூர்த்தி, முன்னாள் ஊராட்சி ஒன்றியக்குழு துணைத் தலைவர் சீனிவாசன்,  முன்னாள் மாநில பொதுக்குழு உறுப்பினர் சரவணகுமார், ஊராட்சி கழக செயலாளர்கள் ஜேசுராஜ், சங்கையா, குணசேகரன் மற்றும் அதிமுகவினர் பலர் இருந்தனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!