18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » நாடாளுமன்ற தேர்தல் வாக்கு எண்ணும் பணி நிறைவு வாக்குப்பதிவு இயந்திரங்கள் எடுத்துச் செல்லும் பணி ஆட்சியர் ஆய்வு…

நாடாளுமன்ற தேர்தல் வாக்கு எண்ணும் பணி நிறைவு வாக்குப்பதிவு இயந்திரங்கள் எடுத்துச் செல்லும் பணி ஆட்சியர் ஆய்வு…

எழுதியவர்: ஆசிரியர் May 26, 2019, 4:18 pm

இராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதி பொதுத் தேர்தல், பரமக்குடி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு 18/4/19 ல் நடந்தது. 23 /5/2019 ல் வாக்கு எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இதனையடுத்து இந்திய தேர்தல் ஆணைய அறிவுறுத்தல் படி, வாக்குப் பதிவிற்கு பயன்படுத்திய வாக்கு எண்ணும் மையத்தில் உள்ள மின்னணு வாக்குப்பதிவு  இயந்திரங்கள், வாக்காளர் சரி பார்ப்பு இயந்திரங்களை சட்டமன்ற  தொகுதி வாரியாக பாதுகாப்பு அறைகளுக்கு கொண்டு செல்லும் பணி நடைபெற்று வருகின்றன.

வாக்கு எண்ணும் மையத்தில் (அண்ணா பல்கலை பொறியியல் கல்லூரி) இருந்து மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனைத்தும் அந்தந்த சட்டமன்ற தொகுதி வாரியாக தேர்வு செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு அறைகளுக்கு கொண்டு செல்லப்படுகின்றன. உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் கண்காணிப்பில் நடைபெறும்.  இப்பணியை, மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவ் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

எடுத்துச் செல்லப்படும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பரமக்குடி , திருவாடானை சட்டமன்ற தொகுதிகளில் அந்தந்த வட்டாட்சியர் அலுவலகங்கள் ராமநாதபுரம், முதுகுளத்தூர், சட்டமன்ற தொகுதிகளில் அந்தந்தவேளாண் ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்கள் திருச்சுழி சட்டமன்ற தொகுதியில்  விருதுநகர் வேளாண் ஒழுங்குமுறை விற்பனை கூடம், அறந்தாங்கி சட்டமன்ற தொகுதியில்  அறந்தாங்கி வட்டார வளர்ச்சி அலுவலர் அலுவலகத்திலும் உள்ள பாதுகாப்பு அறைகள் வைக்கப்பட உள்ளன. மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனைத்தும் ஆயுதம் ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் ஜிபிஎஸ் பொருத்தப்பட்ட வாகனங்கள் மூலம் கொண்டு செல்லப்படுகின்றன. ஆய்வின் போது, மாவட்ட வருவாய் அலுவலர் முத்துமாரி, உதவி தேர்தல் அலுவலர்கள்  மதியழகன், சுமன், ராமன், கயல்விழி சுப்பையா, கார்த்திகைசெல்வி, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கான  பொறுப்பு அலுவலர் ரவிச்சந்திரன் மற்றும் அங்கீகரிக்கப்பட்டஅரசியல் கட்சி  பிரதிநிதிகள் உடனிருந்தனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!