17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » மதுரையில் கஞ்சா விற்பனை செய்த மூன்று நபர்கள் கைது…

மதுரையில் கஞ்சா விற்பனை செய்த மூன்று நபர்கள் கைது…

எழுதியவர்: ஆசிரியர் May 22, 2019, 10:22 pm

மதுரை செல்லூர் காவல் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் முருகநாதன் மற்றும் போலீஸார் ரோந்து வந்து கொண்டு இருந்த போது மதுரை அருள்தாஸ்புரம் வாட்டர் டேங்க் எதிரில் மூன்று நபர்கள் கஞ்சா விற்பனை செய்துகொண்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

எனவே மூவரிடமும் விசாரணை செய்த போது மதுரை தத்தனேரி கணேசபுரத்தை சேர்ந்த காளிமுத்து மகன் செந்தில்குமார் வயது 39, செல்வராஜ் மகன் பாலசுமன்ராஜ் (வயது 30) மற்றும் செல்வம் மகள் தமிழ்செல்வி (வயது 25) என தெரியவந்தது. அவர்களை கைது செய்த போலீஸார் அவர்களிடம் இருந்து 1.250 கிலோ கிராம் கஞ்சா , கஞ்சா விற்பனைக்கு பயன்படுத்திய TN 58 AH 6928 ஆட்டோ மற்றும் கஞ்சா விற்பனை செய்த பணம் ரூ.1200/- ம் கைப்பற்றினர்.

கீழை நியூஸுக்காக மதுரை நிருபர் கனகராஜ்
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!