17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » கல்வி » கீழக்கரை செய்திகள் » நிகழ்வுகள் » பேச்சு போட்டியில் மாவட்ட அளவில் முதலிடம் பெற்ற இஸ்லாமியா மெட்ரிக் பள்ளி ஒன்பதாம் வகுப்பு மாணவி..

பேச்சு போட்டியில் மாவட்ட அளவில் முதலிடம் பெற்ற இஸ்லாமியா மெட்ரிக் பள்ளி ஒன்பதாம் வகுப்பு மாணவி..

எழுதியவர்: ஆசிரியர் March 22, 2017, 2:36 pm

கீழக்கரை இஸ்லாமிய பள்ளி மாணவ, மாணவிகள் பல மாநில அளவிளான கல்வி மற்றும் விளையாட்டு போட்டிகளில் பரிசுகளை வருடா வருடம் பெற்று வருவது குறிப்பிடத்தக்கது. அதன் வரிசையில் பேச்சு போட்டியில் மாணவி ரிஜா உமைரா மாநில அளவில் பல பரிசுகள் பெற்று சாதனை படைத்துள்ளார்.

சமீபத்தில் தேசிய பசுமை இயக்கம் மற்றும் முஹம்மத் தஸ்தகீர் பள்ளி இணைந்து நடத்திய சுற்றுச்சூழல் விழிப்புணர்வுக்கான போட்டியில் ” நீர் என் வாழ்க்கை ” என்ற தலைப்பில் உரையாற்றி மாவட்ட அளவில் முதலிடம் பெற்றார். அதேபோல் கடந்த மாதம் கீழக்கரை தாஸீம் பீவி கல்லுரியில் நடைபெற்ற அறிவியில் கருத்தரங்கில் ” A single page will change” என்ற தலைப்பில் உரையாற்றி முதலிடம் பெற்றார் . மேலும் கீழக்கரை உசைனியா மஹாலில் சுவாமி கிருஷ்ணானந்தா சேவா டிரஸ்ட் கல்வி சார்பாக நடைபெற்ற கல்வி திருவிழா போட்டியிலும் ” தமிழ் இலக்கியமும் அறிவியலும் ” என்ற தலைப்பில் சிறப்பாக உரையாற்றி முதல் பரிசு பெற்றார்.

இதுபோன்று போட்டிகளில் பங்கு பெற்று பள்ளிக்கு பெருமை சேர்க்கும் மாணவியை ஊக்குவிக்கும் விதமாக பாராட்டி பள்ளியின் தாளாளர் இபுராகிம் அம்மாணவிக்கு சிறப்பு பரிசு வழங்கினார். இந்நிகழ்வில் பள்ளயின் தலைமை ஆசிரியை மற்றும் வகுப்பு ஆசிரியையும் உடனிருந்தனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!