17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » ஜோலார்பேட்டை ஏலகிரி மலை பகுதியில் விண்ணில் தெரிந்த வெளிச்சம்..

ஜோலார்பேட்டை ஏலகிரி மலை பகுதியில் விண்ணில் தெரிந்த வெளிச்சம்..

எழுதியவர்: ஆசிரியர் May 22, 2019, 12:44 pm

வேலூர் மாவட்டம் ஜோலார்பேட்டை – வாணியம்பாடி இடையே ஏலகிரி மலை உள்ளது. அங்கு இன்று காலை சுமார் 5-30 மணியளவில் விண்ணில் செயற்கை கோள் போல் ஒளி சென்றது. இது பார்ப்பதற்கு விண்வெளியில் விண்கலம் செலுத்தியது போல் காட்சி தந்தது. விடியற்காலை என்பதால் பொன்னேரி, ஏலகிரி அடிவாரம் மற்றும் சுற்றுப்புறமக்கள் ஆச்சரியத்துடன் பார்த்தனர். இளைஞர்கள் அதை செல்போனில் படம் மற்றும் வீடியோ எடுத்தனர்.

ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து பிஎஸ்எல்வி சி- 46 ராக்கெட் மூலம் ரிசார்ட்-2 பி செயற்கைக்கோள் இன்று காலை 5.30 மணிக்கு விண்ணில் வெற்றிகரமாக செலுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

கே.எம்.வாரியார்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!