18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » திருமங்கலம் அருகே ஆட்டோ கவிழ்ந்து 10 பேர் படுகாயம்… திருமங்கலம் அரசு மருத்துவமனையில் அனுமதி..

திருமங்கலம் அருகே ஆட்டோ கவிழ்ந்து 10 பேர் படுகாயம்… திருமங்கலம் அரசு மருத்துவமனையில் அனுமதி..

எழுதியவர்: ஆசிரியர் May 21, 2019, 9:32 pm

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே ஒரு ஆட்டோவில் அளவுக்கு அதிகமாக ஆட்களை ஏற்றி வந்ததால் ஆட்டோ கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 10 பேர் படுகாயம் அடைந்து திருமங்கலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர். இச்சம்பவம் குறித்து திருமங்கலம் நகர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

திருமங்கலம் அருகே எஸ் வலையப்பட்டி சேர்ந்த பெண்கள் கூத்தியார்குண்டு சிட்கோ வளாகத்தில் பிரஸ் கம்பெனியில் வேலை பார்க்கின்றனர். அவர்கள் பணி முடிந்து ஒரே ஆட்டோவில 9 பெண்கள் உள்பட 10 பேர்  வலையப்பட்டி வந்துகொண்டிருந்தபோது திருமங்கலம் அருகே மாம்பட்டி சாலையில் திடீரென ஆட்டோ கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஆட்டோ டிரைவர் ராஜ்குமார் மற்றும் வளையப்பட்டி சேர்ந்த ராசி நாகஜோதி லட்சுமி உள்ளிட்ட 9 பெண்கள் மொத்தம் 10 பேர் படுகாயம் அடைந்து திருமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

இதில் 3 பேர் படுகாயமடைந்து மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஒரு ஆட்டோவில் 10 பேர் பயணித்ததால் ஆட்டோ கவிழ்ந்து விபத்துக்குள்ளானதாக போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.  ஆட்டோ டிரைவர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கோரிக்கை வைத்துள்ளனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!