18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » நிலக்கோட்டை போலீஸ் நிலையத்திற்கு வெளியே நின்று தாலி கட்டிய காதல் ஜோடி..

நிலக்கோட்டை போலீஸ் நிலையத்திற்கு வெளியே நின்று தாலி கட்டிய காதல் ஜோடி..

எழுதியவர்: ஆசிரியர் May 20, 2019, 11:54 pm

திண்டுக்கல் மாவட்டம், வெள்ளோடு சேர்ந்த சார்லஸ் மகன் கிறிஸ்டோபர் எடிசன் வயது 27 .இவர் லாரி டிரைவராக பணிபுரிந்து வருகிறார் . இவர் அதே பகுதியைச் சேர்ந்த யாகப்பன் மகள் ஜெப பிரியா வயது 20 ஒரு வருடத்துக்கும் மேலாக இருவரும் ஒருவரை ஒருவர் காதலித்து வந்தனர். இதற்கு ஜெப பிரியா பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் திடீரென இருவரும் நிலக்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பாதுகாப்பு தேடி தஞ்சம் அடைந்தனர்.  இதனை நிலக்கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் சங்கரேஸ்வரன் விசாரித்து,  பின்னர் இருவரும் வெள்ளோடு பகுதியை சேர்ந்தவர்கள் என்பதால் திண்டுக்கல்  அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு சென்று புகார் செய்ய அறிவுரை கூறி போலீசார் அனுப்பி வைத்தனர்.

அதனைத் தொடர்ந்து காதல் ஜோடி இருவரும் நிலக்கோட்டை போலீஸ் நிலையம் முன்பு நின்று தனது சட்டைப் பாக்கெட்டில் வைத்திருந்த தாலியை எடுத்து திடீரென கட்டினார். இதன் பின்னர் காதல் ஜோடி இருவரும் அங்கிருந்து சென்றுவிட்டனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!