17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » மாநில அளவிலான வாலிபால் போட்டியில் சென்னை, மதுரை, தூத்துக்குடி அணிகள் சாம்பியன்..

மாநில அளவிலான வாலிபால் போட்டியில் சென்னை, மதுரை, தூத்துக்குடி அணிகள் சாம்பியன்..

எழுதியவர்: ஆசிரியர் May 20, 2019, 6:40 pm

கோவில்பட்டி அருகே உள்ள எட்டயபுரம் படர்ந்தபுளி கிராமத்தில் ஆண்டுதோறும் அங்குள்ள லியோ கைப்பந்து கழகம் மூலமாக மாநில அளவிலான வாலிபால் போட்டிகள் நடைபெற்றுவருகிறது. அந்த வகையில் 16வது ஆண்டு கனரா வங்கி சுழற்கோப்பைக்கான மாநில அளவிலான வாலிபால் போட்டிகள் நேற்று முன் தினம் தொடங்கியது. பகலிரவு போட்டிகளாக 2 நாள்கள் நடைபெற்ற இந்த போட்டியில் தமிழகம் முழுவதிலும் இருந்து அணிகள் பங்கேற்றுள்ளன. ஆண்கள், பெண்கள் மற்றும் பள்ளி மாணவர்கள் என 3 பிரிவுகளாக போட்டிகள் நடத்தப்பட்டது.

இதில் ஆண்கள் பிரிவில் 28 அணிகளும்,பெண்கள் பிரிவில் 8 அணிகளும், பள்ளி மாணவர்கள் பிரிவில் 13 அணிகளும் பங்கேற்று விளையாடியது. நாக் அவுட் முறையில் நடைபெற்ற இந்த போட்டியின் ஆண்கள் இறுதி போட்டியில் சென்னை அணியும், தூத்துக்குடி அணியும் மோதியது.இதில் சென்னை அணி வெற்றி பெற்று சாம்பியம் பட்டத்தினை தட்டிச்சென்றது. பெண்கள் பிரிவின் இறுதி போட்டியில் மதுரை மற்றும் கோவில்பட்டி அணிகள் மோதின. இந்த போட்டியில் மதுரை அணி வெற்றி பெற்றது. பள்ளி மாணவர்கள் பிரிவு இறுதி போட்டியில் தூத்துக்குடி கார்டுவெல் பள்ளி அணியும். தருவைகுளம் அரசு மேல் நிலைப்பள்ளி அணியும் மோதியது. இதில் கார்டுவெல் பள்ளி அணி வெற்றி பெற்றது. பின்னர் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசு கோப்பை மற்றும் பரிசுத்தொகை வழங்கப்பட்டது.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!