17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » மதுரையில் பட்டறை தொழிலாளி விபத்தில் பலி..

மதுரையில் பட்டறை தொழிலாளி விபத்தில் பலி..

எழுதியவர்: ஆசிரியர் May 20, 2019, 5:47 pm

மதுரை ஜெய்ஹிந்த்புரம் பாரதியார் தெருவைச் சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் (வயது 45) லேத் பட்டறை தொழிலாளியான இவர் அவனியாபுரம் கற்பகநகரில் இருந்து வில்லாபுரம் நோக்கி மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார்.

அப்போது அந்த வழியே வந்த டிப்பர் லாரி அவர் வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியதில் பாலகிருஷ்ணன் நிலை தடுமாறி விழுந்தார். இதில் லாரி சக்கரம் ஏறியதில் சம்பவ இடத்திலேயே பலியானார். சம்பவ இடத்திற்கு வந்த போக்குவரத்து போலீசார் உடலை கைப்பற்றி அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு உடல் கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்தனர்.

கீழை நியூஸுக்காக மதுரை நிருபர் கனகராஜ்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!