17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » நண்பரின் விசேஷ நிகழ்ச்சிக்கு வந்தவர் குடிபோதையில் மண்டப மாடியிலிருந்து தவறி விழுந்து பலி..

நண்பரின் விசேஷ நிகழ்ச்சிக்கு வந்தவர் குடிபோதையில் மண்டப மாடியிலிருந்து தவறி விழுந்து பலி..

எழுதியவர்: ஆசிரியர் May 20, 2019, 3:14 pm

மதுரை அண்ணா நகரைச் சேர்ந்தவர் பால்பாண்டி மகன் பாண்டிக் கண்ணன் (25). இவர் தனது நண்பரின் காதணி விழா நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக ஏழுமலை அருகே கிராமத்திற்கு வந்துள்ளார். இரவில் விசேஷ நிகழ்ச்சி நடைபெறும் மண்டபத்தின் மாடியில் அமர்ந்து மது அருந்தியுள்ளார்.

அப்பொழுது எதிர்பாராத விதமாக மாடியிலிருந்து தவறி விழுந்து பலியானார். சம்பவமறிந்த போலிசார் பாண்டிக் கண்ணன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக உசிலம்பட்டி அரசு மருத்துவமணைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் எழுமலைபோலிசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!