17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » திண்டுக்கல் மாவட்டம் அம்மையநாயக்கனூர் அருகே தேர்தல் பறக்கும் படையினர் 80 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்தனர்…

திண்டுக்கல் மாவட்டம் அம்மையநாயக்கனூர் அருகே தேர்தல் பறக்கும் படையினர் 80 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்தனர்…

எழுதியவர்: ஆசிரியர் May 18, 2019, 9:36 pm

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை தாலுகா அம்மையநாயக்கனூர் அருகே இன்று மாலை ஆறு மணி அளவில் தேர்தல் பறக்கும் படை அதிகாரி இளையராஜா தலைமையில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது திண்டுக்கல் ஸ்டேட் பேங்கில் இருந்து சின்னாளப்பட்டி கொடைரோடு அம்மையநாயக்கனூர் சிலுக்குவார்பட்டி, நிலக்கோட்டை, வத்தலக்குண்டு ஆகிய ஊர்களில் உள்ள வங்கி ஏடிஎம் மில் பணம் நிரப்புவதற்காக வேனில் கொண்டுவரப்பட்ட பணத்தை சோதனை செய்தனர்.

அப்பொழுது சரியான ஆவணங்கள் இல்லாததால் தேர்தல் பறக்கும் படை அதிகாரி இளையராஜா தலைமையிலான பறக்கும் படை குழுவினர் பணத்தை பறிமுதல் செய்து நிலக்கோட்டை தாசில்தார் நவநீதகிருஷ்ணனிடம் ஒப்படைத்தனர். பின்பு பணத்தை எண்ணி சரிபார்த்து அதே பெட்டியில் வைத்து சீல் இடப்பட்டு கருவூலத்தில் ஒப்படைத்தனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!