17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » கடந்த 3 மாதங்களாக பழுதடைந்த நிலையில் கிடக்கும் குடி நீர் குழாய்..

கடந்த 3 மாதங்களாக பழுதடைந்த நிலையில் கிடக்கும் குடி நீர் குழாய்..

எழுதியவர்: ஆசிரியர் May 18, 2019, 2:21 pm

உசிலம்பட்டி கீழப்புதூரில் கடந்த 3 மாதமாக பழுதடைந்துள்ள குடிநீர் குழாயை சரி செய்ய வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்,

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி கீழப்புதூர் 16வது வார்டில் 200க்கும் மேற்பட்டோர் வசித்து வருக்கின்றனர். இந்நிலையில் கடந்த 3 மாதமாக அந்த பகுதியில் உள்ள குடிநீர் குழாய் மற்றும் மின் மோட்டார்கள் பழுதடைந்துள்து. இதனால் அந்த பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் குடிநீர் இல்லாமல் பெரும் சிரம்மப்பட்டு வருகின்றனர்.

இதுகுறித்து நகராட்சி ஆனையாளரிடம் குடிநீர் குழாய் மற்றும் மின் மோட்டார்களை சரி செய்ய வேண்டுமென மனு அளித்து வந்தனர். ஆனால் 3 மாதங்களாகியும் இதுவரை சரி செய்யாமல் இருப்பதால் குடிநீர் இல்லாமலேயே உப்பு தண்ணீரையே குடித்து வருவதாக பொதுமக்கள் வேதனை தெரிவிக்கின்றனர். உடனே நகராட்சி அதிகாரிகள் தலையிட்டு பழுதடைந்துள்ள குடிநீர் குழாய் மற்றும் மின் மோட்டார்களை விரைவில் சரி செய்து குடிநீர் வழங்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டு மென அதிகாரிகளுக்கு பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!