17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » ஆலங்குளத்தில் ஜவுளி எடுக்க வந்த பெண்ணை கேலி செய்த வாலிபருக்கு அடி உதை-பரபரப்பு.. காணொளி..

ஆலங்குளத்தில் ஜவுளி எடுக்க வந்த பெண்ணை கேலி செய்த வாலிபருக்கு அடி உதை-பரபரப்பு.. காணொளி..

எழுதியவர்: ஆசிரியர் May 17, 2019, 8:36 pm

நெல்லை மாவட்டம் ஆலங்குளம் அம்பை பிரதானசாலையில் ஜவுளிகடை உள்ளது. ஜவுளிகடைக்கு ஜவுளி எடுக்க வந்த பெண்ணை அருகில் இருந்த வாலிபர் கேலி செய்துள்ளார். ஜவுளி எடுக்க வந்த அப்பெண்ணின் குடும்பத்தினர்கள் பெண்கள் உட்பட 10 பேர் கேலி செய்த வாலிபரை அடித்து உதைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் அப்பெண்ணின் குடும்பத்தினர்கள் இந்த சம்வத்தை படம் பிடித்த தனியார் தொலைக்காட்சி நிருபரை தகாத வார்த்தையால் பேசி தாக்கியுள்ளதாக தெரிகிறது.இது குறித்து ஆலங்குளம் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

இச்சம்பவம் காரணமாக சிறிது நேரம் (15- நிமிடம்) அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டதுடன் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்த சம்பவம் குறித்து ஆலங்குளம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

செய்தியாளர்:- அபுபக்கர்சித்திக்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!