18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » டிஜிட்டல் கேமராவும் இல்லை..ஈமெயிலும் இல்லை-மோடி பொய் பேசி வருவதாக மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு..

டிஜிட்டல் கேமராவும் இல்லை..ஈமெயிலும் இல்லை-மோடி பொய் பேசி வருவதாக மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு..

எழுதியவர்: ஆசிரியர் May 16, 2019, 4:04 am

மதுரை திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர் சரவணனை ஆதரித்து அனுப்பானடி பகுதியில் ஸ்டாலின் பிரச்சாரம் செய்தார். அப்போது வருகின்ற 23ம் தேதி அன்று மோடி பிரதமர் பதவியில் இருந்து வெளியேற்றப்பட இருப்பதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

பிரதமராவதற்கு முன்பும் பொய் சொன்ன மோடி பிரதமரான பிறகும் பொய் கூறிக்கொண்டிருக்கிறார். 2 கோடி பேருக்கு வேலை கொடுப்பேன் என்று மோடி அளித்த வாக்குறுதியும் பொய், ஒவ்வொருவரது வாங்கிக்கணக்கிலும் பாஜக ஆட்சிக்கு வந்ததும் தலா ரூ.15 லட்சம் போடுவோம் என கூறியதும் பொய் தான். பொய் பேசுவதில் பிரதமர் நரேந்திர மோடிக்கு ஈடு இணை யாரும் கிடையாது.

1987ஆம் ஆண்டு நடைபெற்ற பேரணியின் போது அத்வானியை டிஜிட்டல் கேமராவில் போட்டோ எடுத்து ஈ மெயிலில் அவருக்கு அனுப்பி வைத்ததாக மோடி பேசியதை சுட்டிக்காட்டிய ஸ்டாலின், அந்த காலகட்டத்தில் டிஜிட்டல் கேமராவுமில்லை ஈமெயிலும் இல்லை என்றார்.பிரதமர் மோடி அதிகமாக பொய் பேசி வருவதாகவும் குற்றம்சாட்டினார்.

திமுக ஆட்சிக்கு வந்தவுடன் விவசாய கடன், கல்விக் கடனை முழுவதுமாக ரத்து செய்யப்படும் என்றும் மு.க.ஸ்டாலின் உறுதி அளித்தார்.

செய்தியாளர்:- அபுபக்கர்சித்திக்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!