17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » விருதுநகர் அருகே டாஸ்மாக் கடையை அகற்ற கோரி 50க்கும் மேற்பட்ட பெண்கள் முற்றுகையிட்டு போராட்டம்..

விருதுநகர் அருகே டாஸ்மாக் கடையை அகற்ற கோரி 50க்கும் மேற்பட்ட பெண்கள் முற்றுகையிட்டு போராட்டம்..

எழுதியவர்: ஆசிரியர் May 16, 2019, 2:55 am

விருதுநகர் அல்லம்பட்டி காமராஜர் சிலை அருகில் அமைக்கப்பட்டிருந்த அரசு மதுபான கடை கடந்த சில தினங்களுக்கு முன்பு அப்பகுதி மக்களுக்கு இடையூறாக இருப்பதால் அங்கு இருந்து நீக்கப்பட்டது.

பின்பு உள்ளூர் சந்தை சாலையில் உள்ள ஒரு வீட்டில் அந்த மதுபான கடை இரண்டு நாட்களில் திறக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி பெண்கள் கடையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும் அந்த கடைக்கு அருகில் அதிக குடியிருப்பு இருப்பதால் சாலையில் நடந்து செல்லும் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு இடையூறாக இருக்கும் ஆகையால் அக்கடையை அகற்ற வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் போராட்டத்தில் ஈடுபட்ட பெண்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். டாஸ்மாக் கடை வராமலிருக்க காவல்துறையினர் நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்த பின்னர் அப்பகுதி பெண்கள் போராட்டத்தை கைவிட்டனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!