18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » கன்னிவாடியில் விவசாயிகளுக்கு வழங்கப்படும் கிசான் கடன் அட்டைகள் குப்பை கிடங்கில் கண்டுபிடிப்பு?..

கன்னிவாடியில் விவசாயிகளுக்கு வழங்கப்படும் கிசான் கடன் அட்டைகள் குப்பை கிடங்கில் கண்டுபிடிப்பு?..

எழுதியவர்: ஆசிரியர் May 14, 2019, 2:18 pm

திண்டுக்கல் மாவட்டம் கன்னிவாடியில் விவசாயிகளுக்கு வழங்கப்படும் கிசான் கடன் அட்டைகள் குப்பையில் வீசப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அங்குள்ள பேரூராட்சி குப்பை கிடங்கில் 200 -க்கும் மேற்பட்ட கடன் அட்டைகள் வீசப்பட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதில் பாதி அட்டைகள் தீ வைத்து எரிக்கப்பட்டுள்ளன. விவசாயிகளுக்கு கடன் வழங்கப்படும் கடன் அட்டைக்கே இந்த நிலைஎன்றால் எதிர்காலத்தில் விவசாயிகளின் நிலை என்ன என்பது கேள்விக்குறியாக உள்ளது.

ஆகவே, இதுபோன்ற செயலில் ஈடுபட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என அப்பகுதி விவசாயிகளும் சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!