18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » ஆலங்குளத்தில் நடைபெற இருந்த முழு கடையடைப்பு போராட்டம் வாபஸ்..

ஆலங்குளத்தில் நடைபெற இருந்த முழு கடையடைப்பு போராட்டம் வாபஸ்..

எழுதியவர்: ஆசிரியர் May 14, 2019, 1:21 am

ஆலங்குளத்தில் நடைபெற இருந்த வியாபாரிகளின் முழு கடையடைப்பு போராட்டம் எஸ்.பி.அருண்சக்திகுமார் தலைமையில் நடைபெற்ற சமாதான கூட்டத்தையடுத்து வாபஸ் பெறப்பட்டுள்ளது.

நெல்லை மாவட்டம் ஆலங்குளத்தில் வருகின்ற 18தேதி அன்று தமிழ்நாடு வணிக சங்களின் பேரமைப்பு மற்றும் நகர வியாபாரிகளின் சங்கங்களின் சார்பில் ஆலங்குளம் காவல்துறையினை கண்டித்து நடக்க இருந்த முழு கடையடைப்பு போராட்டம் நடைபெற இருந்தது.

இந்நிலையில் நெல்லை எஸ்.பி. அருண்சக்தி குமார் தலைமையில் வணிகர் சங்க பேரமைப்பின் நிர்வாகிகள்,வியாபாரிகள்கலந்து கொண்ட சமாதான கூட்டம் 13.05.19 இன்று நடைபெற்றது.

சமாதான கூட்டத்தை தொடர்ந்து வியாபாரிகளின் கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டுள்ளதாக தமிழ்நாடு வணிக சங்கங்களின் பேரமைப்பு மாநில துணைத் தலைவர் T.P.V.வைகுண்டராஜா அறிவித்துள்ளார்.

செய்தியாளர்:- அபுபக்கர்சித்திக்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!