17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » பொன்னமராவதி அருகே ஏனாதி வயல் பகுதியில் உள்ள கிணற்றில் அடையாளம் தெரியாத ஆண் சடலம் மீட்பு..

பொன்னமராவதி அருகே ஏனாதி வயல் பகுதியில் உள்ள கிணற்றில் அடையாளம் தெரியாத ஆண் சடலம் மீட்பு..

எழுதியவர்: ஆசிரியர் May 13, 2019, 6:25 pm

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி ஒன்றியம் ஏனாதி வயல்பகுதியில் வறண்ட நிலையில் தண்ணீரின்றி விவசாய கேனி ஒன்று உள்ளது. அந்த வழியாக சென்றவர்கள் அப்பகுதியில் துர்நாற்றம் வீசியதை அறிந்த அப்பகுதி மக்கள் உடனடியாக பொன்னமராவதி தீயணைப்பு துறைக்கும் காவல்துறைக்கும் தகவல் தெரிவித்தனர்.

தகவலறிந்து விரைந்து வந்த பொன்னமராவதி காவல்துறையினர் மற்றும் கிராம நிர்வாக அலுவலர் ஆரோக்கியராஜ் ஆகியோர் தண்ணியில்லா கிணற்றில் அடையாளம் தெரியாத நிலையில் சுமார் 55 வயது மதிக்கத்தக்க ஒரு ஆண் சடலம் அழுகிய நிலையில் கிடந்ததை பார்வையிட்டனர். பொன்னமராவதி தீயணைப்பு நிலைய அலுவலர் தியாகராஜன் தலைமையில் மீட்புப் படையினர் சடலமாக கிடந்த பிரேதத்தை மீட்டு காவல்துறை உதவியுடன் பொன்னமராவதி வலையப்பட்டி பாப்பாயி ஆச்சி அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

அடையாளம் தெரியாத நிலையில் கிடந்த பிரேதம் சுமார் இரண்டு நாட்கள் ஆகும் என்பது விசாரணையில் தெரியவந்தது. மேலும், இவர் உள்ளூர் நபரா வெளியூர் நபரா இவரை யாரேனும் கொலை செய்து கிணற்றில் வீசப்பட்டவரா? அல்லது தற்கொலை செய்தாரா? என்று போலீசார் பல்வேறு கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!