17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » மாவட்ட செய்திகள் » ப்ளாஸ்டிக் ஒழிப்பு கண்துடைப்பா??.. நிரந்தரமா??..கீழக்கரை முழுவதும் ரமலான் மாதத்தில் சோதனை…

ப்ளாஸ்டிக் ஒழிப்பு கண்துடைப்பா??.. நிரந்தரமா??..கீழக்கரை முழுவதும் ரமலான் மாதத்தில் சோதனை…

எழுதியவர்: ஆசிரியர் May 13, 2019, 1:12 pm

தமிழகம் முழுவதும் கடந்த வருடம் பல்வகையான ப்ளாஸ்டிக் பொருட்கள் பயன்பாட்டிற்கு பல சிறு வியாபாரிகளின் வாழ்வாதாரம் பாதிப்பையும் மீறி சுற்றுப்புற சூழலை கருத்தில் கொண்டு தடை அமுல்படுத்தப்பட்டது.

அதன் அடிப்படையில் கீழக்கரை நகராட்சியிலும் ஏராளமான விழிப்புணர்வு பிரசுரங்கள் மற்றும் நிகழ்வுகளும் நடத்தப்பட்டது.  பின்னர் தொடக்கத்தில் பல இடங்களில் சோதனை நடத்தப்பட்டு அபராதங்களும் விதிக்கப்பட்டது.  ஆனால் எல்லாம் சில காலங்களுக்கே, பின்னர் எப்பொழுதும் போல் நகராட்சி அதிகாரிகளின் பார்வை படும்படியே அமோகமாக உபயோகம் செய்யப்பட்டது.

இந்நிலையில் கீழக்கரையில், கீழக்கரை நகராட்சி மேலாளர் தனலட்சுமி, உணவு பாதுகாப்பு ஆய்வாளர் சரவணன் தலைமையில் இன்று (13/05/2019) பல்வேறு இடங்களில் திடீர் சோதனை நடத்தப்பட்டு, பல இடங்களில் ப்ளாஸ்டிக் உபயோகம் அடையாளம் காணப்பட்டு அபராதம் விதிக்கப்பட்டு எச்சரிக்கையும் விடப்பட்டது.

கடந்த பல மாதங்களாக பகிரங்கமாக விற்கப்பட்டும், உபயோகப்படுத்தப்பட்டும் வந்ததை தேர்தலுக்காக எந்த நடவடிக்கையும் எடுக்காத நகராட்சி, இஸ்லாமியர்கள் அதிகமாக வாழும் கீழக்கரையில் ரமலான் மாதத்தில் நடைபெற்ற இந்த திடீர் சோதனை வியாபாரிகளையும், பொதுமக்களையும் முகம் சுழிகள் வைத்துள்ளது.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!