மதுரை மாவட்டம் தெற்கு வட்டார போக்குவரத்து அலுவலகம் மாசு கட்டுப்பாட்டு பரிசோதனை கணினி மயமாக்கப்பட்ட காரணத்தினால் ஒரு வாகனத்திற்கு பரிசோதனை செய்ய சுமார் அரை மணி நேரத்துக்கு மேல் ஆகிறது.
இதனால் வாகனங்கள் பல மணிநேரம் காத்து கிடக்க கூடிய நிலைமை ஏற்பட்டுள்ளது என புகார் எழுந்துள்ளது. மேலும் டீசல் வாகனம் மட்டுமே தெற்கு வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் உள்ள வாகன பரிசோதனை நிலையத்தில் பரிசோதனை செய்யும் வசதி உள்ளது, பெட்ரோல் வாகனங்களை பரிசோதனை செய்வதற்கு சுமார் 15 கிலோ மீட்டர் தள்ளி உள்ள வடக்கு வட்டார போக்குவரத்து அலுவலகம் அருகே உள்ள வாகனப் புகை சோதனை மையத்தில் மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இதனால் பெட்ரோல் வாகனம் வைத்திருப்பவர்கள் பல கிலோ மீட்டர் செல்ல வேண்டி உள்ளதாக பொதுமக்கள் மத்தியில் புகார் எழுகிறது. மேலும் வாகன உரிமையாளர்கள் கூறியதாவது, ஐம்பது ரூபாய்க்கு ரசீதை வாங்கிக் கொண்டு 300 ரூபாய் பெற்றுக் கொள்வதாகவும், புகார் எழுந்துள்ளது. இது உண்மையான கட்டணம் என்ன என எழுதி வைக்க வேண்டும் என வாகன உரிமையாளர்கள் கோரிக்கை வைக்கிறார்கள்.
மேலும் அந்தந்த பகுதியில் உள்ள போக்குவரத்து அலுவலகம் அருகே உள்ள வாகன பரிசோதனை நிலையத்திலேயே பெட்ரோல் வாகனத்தையும் பரிசோதனை செய்யும் வசதி வேண்டும் என வாகன பரிசோதனை செய்யும் நிலை உரிமையாளர்களும், பொதுமக்களும் கோரிக்கை விடுக்கிறார்கள்.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்







You must be logged in to post a comment.