17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » சோழவந்தான் அருகே தூக்குப்போட்டு கல்லூரி மாணவி தற்கொலை..தொடர்ச்சியாக அண்ணன்.. தங்கை..

சோழவந்தான் அருகே தூக்குப்போட்டு கல்லூரி மாணவி தற்கொலை..தொடர்ச்சியாக அண்ணன்.. தங்கை..

எழுதியவர்: ஆசிரியர் May 13, 2019, 1:19 am

சோழவந்தான் அருகில் உள்ள அய்யப்பன் நாயக்கன் பட்டியை சேர்ந்தவர் ரமேஷ் (வயது 43) விவசாயி. இவரது மகள் லாவண்யா (வயது 19). இவர் மதுரையில் உள்ள பிரபல தனியார் கல்லூரியில் படித்து வந்தார். நேற்று (11/05/2019) விடுமுறை என்பதால் வீட்டிலேயே இருந்தார்.

பெற்றோர் வெளியே சென்றிருந்த நேரத்தில் லாவண்யா மட்டும் தனியே இருந்தார். மன அழுத்தத்தில் இருந்த அவர், தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார் என அறியப்படுகிறது. வீடு திரும்பிய குடும்பத்தினர் லாவண்யா, தூக்கில் தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

இது குறித்து காடுபட்டி போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது ‌ சப்-இன்ஸ் பெக்டர் ஜோதிமுத்து தலைமையில் போலீசார் விரைந்து சென்று லாவண்யா உடலை கைப்பற்றி விசாரணை செய்து வருகின்றனர்.

5 மாதங்களுக்கு முன்பு லாவண்யாவின் சகோதரர் இவர்கள் குடியிருக்கும் வீட்டில் தற்கொலை செய்ததாக கூறப்படுகிறது. அதில் இருந்தே லாவண்யா, மன உளைச்சலில் இருந்துள்ளார். இந்த நிலையில் அவர் தற்கொலை முடிவை எடுத்துள்ளார்.

ஒரே வீட்டில் சகோதரரும்,சகோதரியும் அடுத்தடுத்து தற்கொலை செய்து கொண்டது குறித்து அந்தப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கீழை நியூஸுக்காக… மதுரை நிருபர் கனகராஜ்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!