17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » ரயில் படியில் பயணித்தவர் தவறி விழுந்து பலி…

ரயில் படியில் பயணித்தவர் தவறி விழுந்து பலி…

எழுதியவர்: ஆசிரியர் May 13, 2019, 12:01 am

விருதுநகர் மாவட்டம் கோவில்பட்டியை சேர்ந்தவர் முனியசாமி. இவரது மகன் பாலாஜி, 33. நேற்று முன் தினம் இவர் பெற்றோர், சகோதரி உடன் ராமேஸ்வரம் வந்தனர். சுவாமி தரிசனம் செய்து விட்டு இன்று மதியம் கோவில்பட்டிக்குச் செல்ல, ராமேஸ்வரத்தில் மதியம் 1: 55 மணிக்கு கிளம்பிய திருச்சி பாசஞ்சர் ரயிலில் மானாமதுரை சென்று ரயில் மாற புறப்பட்டனர். ரயிலின் படிக்கட்டில் அமர்ந்து இயற்கையை ரசித்தவாறு பயணித்த பாலாஜி மண்டபம் முகாம் அருகே ரயில் சென்றுகொண்டிருந்தபோது நிலை தடுமாறி கீழே விழுந்து பலியானார்.

உயிரிழந்த பாலாஜி உடல், ரயில் மூலம் ராமநாதபுரம் ரயில் நிலையத்திச் இறக்கப்பட்டது. பாலாஜிக்கு உமா பார்வதி என்ற மனைவியும் இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!