17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » TARATDAC பழனி, தொப்பம்பட்டி, ஒட்டன்சத்திரம் ஒன்றிய கிளை நிர்வாகிகள் கூட்டம்…

TARATDAC பழனி, தொப்பம்பட்டி, ஒட்டன்சத்திரம் ஒன்றிய கிளை நிர்வாகிகள் கூட்டம்…

எழுதியவர்: ஆசிரியர் May 12, 2019, 6:54 pm

தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் பழனி, தொப்பம்பட்டி, ஒட்டன்சத்திரம் ஆகிய ஒன்றியங்களை சேர்ந்த கிளை நிர்வாகிகள் கூட்டம் இன்று (12.05.19) காலை 10.00 மணியளவில் திண்டுக்கல் மாவட்டம் பழனியில் உள்ள பழனியப்பா நாச்சம்மாள் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. தொப்பம்பட்டி ஒன்றிய செயலாளர் காளீஸ்வரி அவர்கள் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் மாவட்ட செயலாளர் பகத்சிங், மாவட்டக்குழு உறுப்பினர் மகாலிங்கம், ஒட்டன்சத்திரம் ஒன்றிய செயலாளர் துரைராஜ் ஆகியோர் கலந்துகொண்டு பேசினார். இக்கூட்டத்தில் நூற்றுக்கும் மேற்ப்பட்ட கிளை நிர்வாகிகள் பங்கேற்றனர். முடிவில் பாலசமுத்திரம் கிளை செயலாளர் கண்ணுச்சாமி நன்றி கூறினார்.

இக்கூட்டத்தில், தமிழக அரசு கடந்த 2011 ஆண்டுக்கு முன்புவரை மாற்றுத்திறனாளிகளுக்கு உதவித்தொகையாக ரூபாய் 500 மட்டுமே வழங்கி வந்தது. 2011 ம் ஆண்டு ஆட்சிக்கு வந்த அ.தி.மு.க. அரசு 500 ரூபாய் உயர்த்தி 1000 ரூபாயாக உதவித்தொகையை இன்றுவரை வழங்கி வருகிறது. நாம் அன்றாடம் பயன்படுத்தும் அனைத்து பொருட்களின் விலையும் 2011ம் ஆண்டுக்கு பிறகு நான்கு மடங்கு உயர்ந்துவிட்ட சூழ்நிலையில் ஏறுகின்ற விலைவாசிக்கு ஏற்றாற்போல் உதவித்தொகையை உயர்த்தாமல் மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகையை கடந்த எட்டு ஆண்டுகளாக தமிழக அரசு வழங்குவது ஏற்றுக்கொள்ள முடியாதது.

இன்றைய சூழலில் வெறும் ஆயிரம் ரூபாயை மட்டும் வைத்துக்கொண்டு உடலில் பல்வேறு அங்க குறைபாடுகளுடன் வேலை இல்லாமல் வேறு எந்த விதமான வருமானமும் இல்லாமல் ஒரு மாதம் முழுவதும் குடும்பம் நடத்துவது என்பது இயலாத காரியம். எனவே, தமிழக அரசு கடும் ஊனமுற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு 5000 ரூபாயும், இதர மாற்றுத்திறனாளிகளுக்கு 3000 ரூபாயும் உதவித்தொகை வழங்கிட வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!