17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » மதுரை செல்லூரில் வங்கி கடன் செலுத்த முடியாததால் வியாபாரி தற்கொலை..

மதுரை செல்லூரில் வங்கி கடன் செலுத்த முடியாததால் வியாபாரி தற்கொலை..

எழுதியவர்: ஆசிரியர் May 12, 2019, 12:58 pm

மதுரை செல்லூர் அகிம்சாபுரத்தை சேர்ந்தவர் சுந்தரமகாலிங்கம் (வயது 37). இவர் அந்த பகுதியில் வேஸ்ட் பேப்பர் கடை தொழில் செய்து வந்தார். தொழிலை விரிவுபடுத்த பிரபல தனியார் வங்கியில் சுந்தரமகாலிங்கம் கடன் வாங்கினார்.

தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதால் தவணையை அவரால் செலுத்த முடியவில்லை. இதனால் வங்கியில் இருந்து கடனை கேட்டு நெருக்கடி தரப்பட்டுள்ளது.

இதனால் நெருக்கடிக்கு ஆளான அவர், சம்பவத்தன்று வீடடில் யாரும் இல்லாத நேரத்தில் வி‌ஷம் குடித்து மயங்கி கிடந்தார். இதை அறிந்த அக்கம்பக்கத்தினர் சுந்தரமகா லிங்கத்தை மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனிக்காமல் அவர் பரிதாபமாக பலியானார்.

இதுகுறித்து செல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

கீழை நியூஸுக்காக.. மதுரை நிருபர் கனகராஜ்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!