17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » போலீஸ் காவலில் மருத்துவமனையில் இருந்து தப்பியோடிய விசாரணை கைதி மீண்டும் பிடிபட்டார்..

போலீஸ் காவலில் மருத்துவமனையில் இருந்து தப்பியோடிய விசாரணை கைதி மீண்டும் பிடிபட்டார்..

எழுதியவர்: ஆசிரியர் May 12, 2019, 12:34 pm

கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு  திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் இருந்து விசாரணைக் கைதி கார்த்திக் (24) என்பவர் தப்பி ஓடினார். இவரை பிடிப்பதற்கு கள்ளிமந்தயம் காவல் ஆய்வாளர் சரவணன் தலைமையிலான தனிப்படை அமைக்கப்பட்டது.

இஅந்நிலையில் கார்த்திக் என்பவர் சேலம் மாவட்டம் தோப்பூரில் பதுங்கி இருப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் தனிப்படையினர் விரைந்து சென்று கார்த்திக்கையும் அவருடன் இருந்த மற்றும் இருவரையும் மடக்கி பிடித்து கைது செய்து ஒட்டன்சத்திரம் நீதிமன்றத்தில் மூவரையும் ஆஜர்படுத்தி மதுரை மத்திய சிறையில் அடைத்தனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!