17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » விழுப்புரத்தில் நடைபெற்ற கபிலர் தமிழ் இலக்கிய விழா..

விழுப்புரத்தில் நடைபெற்ற கபிலர் தமிழ் இலக்கிய விழா..

எழுதியவர்: ஆசிரியர் May 11, 2019, 11:39 pm

விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூரில் கபிலர் தமிழ் இலக்கிய விழா  நடைபெற்றது. விழாவில் சிறந்த தமிழ்ப் பணிக்காக நெல்லை பொதிகைத் தமிழ்ச் சங்கத்திற்கு”தமிழ்ப் பணிச் செம்மல்”என்ற விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.

வி.ஜி.பி.உலகத்தமிழ்ச் சங்கத்தின் தலைவர் டாக்டர் வி.ஜி.சந்தோசம் விருது வழங்க பொதிகைத் தமிழ்ச் சங்கத்தின் தலைவர் தமிழக அரசின் தமிழ்ச் செம்மல் விருதாளர் கவிஞர் பேரா பெற்றுக் கொண்டார்.

விருது பெற்றுக்கொண்ட பொதிகை தமிழ் சங்கத்திற்கு தமிழ் வளர்ச்சித் துறையின் முன்னாள் இணை இயக்குநர் முனைவர் பசும்பொன், புதுவைத் தமிழ் சங்கத்தின் தலைவர் முத்து,ஈரோடு சுப்பிரமணியம் உட்பட பலர் வாழ்த்துக்கள் தெரிவித்தனர்.

விழாவுக்கான ஏற்பாடுகளை தமிழக அரசின் பாரதியார் விருதாளர் பாரதி சுகுமாரன், எழுத்தாளர் தர்ஷினி மாயா உட்பட பலர் சிறப்பாக செய்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

செய்தியாளர்:- அபுபக்கர்சித்திக்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!