17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » சங்கரன் கோவிலில் மின்னல் தாக்கி உடைந்து விழுந்த கல்லூரி சுவர் -மாணவி ஒருவர் உயிரிழப்பு..

சங்கரன் கோவிலில் மின்னல் தாக்கி உடைந்து விழுந்த கல்லூரி சுவர் -மாணவி ஒருவர் உயிரிழப்பு..

எழுதியவர்: ஆசிரியர் May 11, 2019, 4:16 pm

சில நாட்களாக நெல்லை மாவட்டத்தில் இடி மின்னலுடன் மழை பெய்து வருகிறது. இந்நிலையில் மின்னல் தாக்கியதில் மனோ கல்லூரி கட்டிட‌த்தின் சுவர் இடிந்து விழுந்த‌தில், கல்லூரி மாணவி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

நெல்லை மாவட்டம் சங்கரன் கோவிலில் உள்ள மனோ கல்லூரியில் படித்து வந்த மாணவி மகாலெட்சுமி, இடி மின்னலுடன்  கனமழை பெய்த‌ நிலையில், கல்லூரி வளாகத்தில் உள்ள கட்டிடத்தின் கீழ் மழைக்கு ஒதுங்கி நின்றுள்ளார். அப்போது திடீரென மின்னல் தாக்கியதில், கட்டிடத்தின் முகப்பில் இருந்த சுவர் இடிந்து மாணவியின் தலையில் விழுந்துள்ளது. இதில் மாணவிக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து மாணவியை மருத்துவமனைக்கு அழைத்து சென்ற போது செல்லும் வழியில் மாணவி பரிதாபமாக உயிரிழந்துள்ள சம்பவம் இப்பகுதி மக்களை பெரும் துயரத்தில் ஆழ்த்தியுள்ளது.

செய்தியாளர்:- அபுபக்கர்சித்திக்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!