18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » திருமங்கலம் அருகே மூன்று அரசு பேருந்துகள் சிறைபிடிப்பு போக்குவரத்து அதிகாரிகள் பேச்சுவார்த்தைக்கு பிறகு விடுவிப்பு…

திருமங்கலம் அருகே மூன்று அரசு பேருந்துகள் சிறைபிடிப்பு போக்குவரத்து அதிகாரிகள் பேச்சுவார்த்தைக்கு பிறகு விடுவிப்பு…

எழுதியவர்: ஆசிரியர் May 11, 2019, 3:55 pm

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே பொன்னமங்கலம் கிராமத்தில் அரசுப் பேருந்துகள் கடந்த ஒரு மாத காலமாக ஊருக்குள் வராததால் கிராம மக்கள் 3 அரசு பேருந்தை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர் இதனால் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

திருமங்கலம் அருகே பொன்னமங்கலம் கிராமத்தில் 500க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன கிராமத்திற்கு திருமங்கலத்திலிருந்து வாகைகுளம் செல்லும் பேருந்து, திருமங்கலத்தில் இருந்து கருமாத்தூர் செல்லும் பேருந்து, மதுரை பெரியாரில் இருந்து மேலனேந்தல் செல்லும் பேருந்துகள் பொன்னமங்கலம் கிராமத்திற்கு வராததால், இன்று காலையில் வரிசையாக வந்த அரசு பேருந்துகள் மூன்றையும் கிராம மக்கள் சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தகவலறிந்த போக்குவரத்துத்துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததன் பேரில் போராட்டம் கைவிடப்பட்டது. இதனால் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!