18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » உச்சிப்புளி பஸ் ஸ்டாண்டில் மீனவர் கம்பியால் அடித்து கொலை…சகோதரர்கள் கைது..

உச்சிப்புளி பஸ் ஸ்டாண்டில் மீனவர் கம்பியால் அடித்து கொலை…சகோதரர்கள் கைது..

எழுதியவர்: ஆசிரியர் May 11, 2019, 3:37 pm

இராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளி அருகே நாகாச்சி தேவர் நகரைச் சேர்ந்த முத்தாண்டி மகன் ராமச்சந்திரன், 48. மீனவரான இவர், இன்று காலை கடையில் சாமான்கள் வாங்கிக் கொண்டு வீட்டிற்கு ஆட்டோவில் செல்ல பஸ் ஸ்டாண்ட் சென்றார். உச்சிப்புளி பஸ் ஸ்டாண்டில் ஆட்டோ பிடித்து ஏறி உட்கார்ந்துள்ளார். அப்போது, கீழ நாகாச்சி வெள்ளமாசிவலசையைச் சேர்ந்த முருகேசன் மகன்கள் அங்கு வந்துள்ளனர். ஆட்டோவில் உட்கார்ந்திருந்த ராமச்சந்திரனுக்கும் முருகேசன் மகன்களுக்கும் இடையே கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் உள்ள முன் விரோதம் தொடர்பாக மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில், ஆத்திரமடைந்த முருகேசன் மகன்கள் முனீஸ்குமார், கார்த்தி ஆகியோர் இரும்பு கம்பியால் ராமச்சந்திரன் தலையில் பலமாக தாக்கினர். இதில் ராமச்சந்திரன் சம்பவ இடத்திலே பரிதாபமாக உயிரிழந்தார்.

ராமச்சந்திரன் உடலை, உச்சிப்புளி போலீசார் கைப்பற்றி, இராமநாதபுரம் அரசு மருத்துவமனை அனுப்பி வைத்தனர். இக்கொலை தொடர்பாக,  முனீஸ்குமார் 27, கார்த்தி 22 ஆகியோரை உச்சிப்புளி போலீசார் கைது செய்தனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!