ஆலங்குளத்தில் 10.05.19 அன்று அதிகாலையில் டீ குடிப்பதற்காக திருநெல்வேலி-தென்காசி செல்லும் சாலையில் சைக்கிளில் சென்று கொண்டிருந்த தொழிலாளியின் சைக்கிள் மீது திடீரென லாரி மோதியதால் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
திருநெல்வேலி மாவட்டம் ஆலங்குளம் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்த கூலி தொழிலாளி ஆறுமுகம்,(வயது 63.) இவர் 10.05.19 அன்று காலை டீ குடிப்பதற்காக பஜாருக்கு சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது தென்காசியில் இருந்து நெல்லை நோக்கி வேகமாக சென்று கொண்டிருந்த லாரி ஒன்று அவர் மீது மோதி விட்டு நிற்காமல் சென்று விட்டது. இதில் தூக்கி வீசப்பட்ட ஆறுமுகம் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்த விபத்து குறித்த சிசிடிவி காட்சி தற்போது வெளியாகி உள்ள நிலையில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் ஆறுமுகம் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பாளை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவம் குறித்து ஆலங்குளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருவதுடன் விபத்தை ஏற்படுத்தி விட்டு நிற்காமல் சென்ற வாகனத்தை தேடி வரும் நிலையில் லாரி இருசக்கர வாகனத்தின் மீது மோதும் சிசிடிவி காட்சியை வைத்து ஆய்வு செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
செய்தியாளர்:- அபுபக்கர்சித்திக்




You must be logged in to post a comment.