17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » உசிலம்பட்டி சந்தைதிடல் முன்பு நீண்ட காலமாக தேங்கி கிடக்கும் குப்பை குவியல்…

உசிலம்பட்டி சந்தைதிடல் முன்பு நீண்ட காலமாக தேங்கி கிடக்கும் குப்பை குவியல்…

எழுதியவர்: ஆசிரியர் May 10, 2019, 10:06 pm

மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் உழவர் சந்தை முன்பு நீண்ட நாளாக மலைபோல் சுகாதாரகேடு ஏற்படுத்தும் வகையில் குப்பைகள் தேங்கி கிடக்கின்றது. இதனால் அதனை சுற்றி வசிக்கும் பொதுமக்களுக்கு தொற்றுநோய்கள் ஏற்படும் அபாயம் உள்ளதாக பொதுமக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

இந்த குப்பைகள் தேங்கி கிடக்கும் பகுதிகளை சுற்றி முக்கியமான அலுவலகங்களான உசிலம்பட்டி சட்டமன்ற அலுவலகம், தமிழ்நாடு அரசு வேளான்மைத்துறை அலுவலகம், நூலகம், முன்னாள் ரானுவ சங்க அலுவலகம், ரோட்டரி சங்க அலுவலகம் போன்ற அலுவலகங்கள் உள்ளது.

இதுபோன்று முக்கிய அலுவலகம் இருக்கும் பகுதியில் நீண்ட காலமாக குப்பைகள் தேங்கி கிடப்பதால் அதிகாரிகள் விரைந்து குப்பைகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!