17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » விழுப்புரம் மாவட்டத்தில் வட்டாட்சியர்கள் தலைமையில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்..

விழுப்புரம் மாவட்டத்தில் வட்டாட்சியர்கள் தலைமையில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்..

எழுதியவர்: ஆசிரியர் May 10, 2019, 2:41 am

விழுப்புரம் மாவட்டம் சின்னசேலம் வட்டம், தென்செட்டியந்தல் மற்றும் கள்ளக்குறிச்சி வட்டம் நமச்சிவாயபுரம் கிராம எல்லையில் சுமார் 30 ஆண்டுகளாக இரண்டு குடும்பத்தார்களுக்கு இடையே நிலவிவந்த பாதை பிரச்சினை தொடர்பாக வழக்கு நடைபெற்று உயர்நீதிமன்றம் பிறப்பித்த ஆணை மற்றும் விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அவர்களின் உத்தரவின்படி 8.5.2019 காலை 11.00 மணியளவில் சின்னசேலம் வட்டாட்சியர் திருமதி. இந்திரா, கள்ளக்குறிச்சி வட்டாட்சியர் திரு. தயாளன் ஆகியோர்களால் ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டது.

ஆக்கிரமிப்பை அகற்றிய பின் பொதுமக்களுக்கு அப்பகுதியில் பாதை வசதி சிறப்பாக செய்து தரப்பட்டது.அப்போது துணை வட்டாட்சியர்கள் திருவாளர்கள் கமலக்கண்ணன், குமரன், சின்னசேலம் மற்றும் இந்திலி வருவாய் ஆய்வாளர்கள், நில அவர்கள், இரண்டு வட்டத்தினையும் சேர்ந்த கிராம நிர்வாக அலுவலர்கள், கிராம உதவியாளர்கள் ஆகியர்களும் உடன் இருந்தனர்.

இந்நேர்வில் கச்சிராயபாளையம் காவல் ஆய்வாளர் திருமதி. வள்ளி, உதவி ஆய்வாளர் இளையராஜா உள்ளிட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணி மேற்கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

செய்தியாளர்:- அபுபக்கர்சித்திக்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!