17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » கல்லூரி மாணவிக்கு பாலியல் தொந்தரவு விவகாரம்-மூன்று காவலர்கள் சஸ்பெண்ட்..

கல்லூரி மாணவிக்கு பாலியல் தொந்தரவு விவகாரம்-மூன்று காவலர்கள் சஸ்பெண்ட்..

எழுதியவர்: ஆசிரியர் May 9, 2019, 8:02 pm

நெல்லை மாவட்டம் சுரண்டையில் காமராஜர் அரசு கல்லூரி உள்ளது. இந்த கல்லூரியில் பயிலும் மாணவிக்கு செல்போன் மூலம் பாலியல் தொந்தரவு செய்தது தொடர்பாக மூன்று காவலர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.

நெல்லை மாவட்டம் சுரண்டையில் உள்ள காமராஜர் அரசு கலைக் கல்லூரியில் 2ஆம் ஆண்டு பயின்று வரும் மாணவி ஒருவருக்கு சுரண்டை காவல் நிலைய காவலர் முருகேசன் என்பவர், கடந்த ஒரு வருடமாக பாலியல் ரீதியாக பேசி தொந்தரவு செய்ததாக கூறப்படுகிறது. இது குறித்து அந்த மாணவி கடந்த மாதம் மாவட்ட எஸ்பி., அலுவலகத்தில் புகார் அளித்தார்.

இதையடுத்து காவலர் முருகேசன், அவருக்கு உதவியதாக மற்றொரு காவலர் கண்ணன் ஆகியோர் மணிமுத்தாறு ஆயுதப்படைக்கு பணி இடமாற்றம் செய்யப்பட்டனர்.

இந்நிலையில் காவலர்கள் முருகேசன், கண்ணன் மற்றும் பெண் காவலர் சரஸ்வதி ஆகியோர் மாணவியை மிரட்டியதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக காவலர்கள் முருகேசன், கண்ணன்,சரஸ்வதி ஆகிய மூவரையும் தற்காலிகமாக சஸ்பெண்ட் செய்து நெல்லை எஸ்.பி அருண் சக்திகுமார் உத்தரவிட்டுள்ளார்.

செய்தியாளர்:- அபுபக்கர்சித்திக்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!