17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » ஜெ., ஆட்சியை யாராலும் கவிழ்க்க முடியாது லோக் சபா துணை சபாநாயகர் தம்பிதுரை ராமேஸ்வரத்தில் பேட்டி.:

ஜெ., ஆட்சியை யாராலும் கவிழ்க்க முடியாது லோக் சபா துணை சபாநாயகர் தம்பிதுரை ராமேஸ்வரத்தில் பேட்டி.:

எழுதியவர்: ஆசிரியர் May 9, 2019, 4:18 pm

லோக்சபா துணை சபாநாயகர் ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் இன்று காலை தரிசனம் செய்தார்.

இதன் பின்னர் அவர் அளித்த பேட்டிநில், அதிமுக ஆட்சி நிலையான ஆட்சி ஜெயலலிதா ஆட்சியை யாரும் கலைக்க முடியாது. ஜெ., ஆட்சிக்கு மக்கள் வாக்களித்துள்ளனர். மூன்றாண்டுகள் கடந்த நடந்து விட்டது .இன்னும் இரண்டு ஆண்டுகள் சிறப்பாக ஆட்சி நடைபெறும். முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர். மக்கள் அதிமுக ஆட்சி பக்கம் உள்ளனர் .இரட்டை இலையும் எங்கள் பக்கம் உள்ளது .அதிமுக கூட்டணி நாடாளுமன்ற தேர்தலில் 39 தொகுதிகளிலும் வெற்றி பெறும். சட்டமன்ற இடைத்தேர்தல் 22 தொகுதிகளிலும் அதிமுக வெற்றி பெறும் என்பதில் சந்தேகம் இல்லை.

ஜெயலலிதாவின் ஆன்மா அதிமுகவை எப்போதும் வழி நடத்தும். இந்த ஆட்சி தொடரும் அடுத்த தேர்தலிலும் அதிமுக அனைத்து தொகுதியில் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் . ஜெ., ஆட்சியை வீழ்த்த யாராலும் முடியாது. தேர்தல் ஆணையம் எடுக்கும் முடிவுகளுக்கு அதிமுக எப்போதுமே கட்டுப்படும். சிலர் அரசியல் மற்றும் பேச்சுக்காக சொல்லும் கருத்துக்கு பதில் சொல்ல முடியாது என்றார்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!