18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » கிணற்றில் விழுந்தவரை போராடி மீட்ட தீயணைப்பு படையினர்..

கிணற்றில் விழுந்தவரை போராடி மீட்ட தீயணைப்பு படையினர்..

எழுதியவர்: ஆசிரியர் May 9, 2019, 3:00 pm

உசிலம்பட்டி அருகே இடையபட்டியில் 60 அடி கிணற்றுக்குள் மோட்டார் பழுது பார்க்க சென்ற போது தங்கப்;பாண்டி (35) என்பவர் கிணற்றுக்குள் தவறி விழுந்தார். தீயனைப்பு துறையினர் அவரை நீண்ட நேரத்திற்கு பிறகு உயிருடன் பத்திரமாக மீட்டனர்.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே கிருஷ்ணாபுரத்தைச் சேர்ந்த தங்கப்பாண்டி (35) என்பவர் இடையபட்டியில் உள்ள 60 அடி தோட்ட கிணற்றுக்குள் மோட்டரை சரிசெய்வதற்காக இறங்கினார். அப்போது எதிர்பாராத விதமாக தவறி கிணற்றுக்குள் விழுந்தார். உடனே அவரது உறவினர்கள் தீயனைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலறிந்த தீயனைப்பு துறையினர் கிணற்றுக்குள் தவறிவிழுந்த தங்கபாண்டியை நீண்ட நேரமாக போராடி உயிருடன் பாத்திரமாக மீட்டனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!