18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » டி. கல்லுப்பட்டி பேருந்து நிலையத்தில் உடைந்து சேதமான நிலையில் பயணிகள் இருக்கை.. அதிகாரிகள் கவனிப்பார்களா??..

டி. கல்லுப்பட்டி பேருந்து நிலையத்தில் உடைந்து சேதமான நிலையில் பயணிகள் இருக்கை.. அதிகாரிகள் கவனிப்பார்களா??..

எழுதியவர்: ஆசிரியர் May 9, 2019, 2:00 pm

மதுரை மாவட்டம் டி.கல்லுப்பட்டி பேருந்து நிலைய உள்பகுதியில் அரசு நிதியிலிருந்து கடந்த சில மாதங்களுக்கு முன்பு பயணிகளுக்காக பேருந்து நிலையத்தில் இருக்கைகள் அமைக்கப்பட்டன. ஆனால் சில மாதங்களிலேயே அந்த இருக்கைகள் அனைத்தும் உடைந்து சேதமாகி விட்டன.

இந்நிலையில் ராஜபாளையம், சிவகாசி, விருதுநகர், திருநெல்வேலி, கன்னியாகுமரி, போன்ற பகுதிகளுக்கு செல்லும் பேருந்துகள் அனைத்தும் டி. கல்லுப்பட்டி பேருந்து நிலையத்திற்குள் சென்று சில நேரங்களில் காத்திருந்து தான் செல்கிறது. அந்த நேரங்களில் பயணிகள் கீழே இறங்கி பேருந்து நிலைய இருக்கைகளில் அமர்ந்து ஓய்வெடுக்கும் சூழல் ஏற்படுகிறது.  ஆனால் இருக்கைகள் அனைத்தும் சேதமாகி இருப்பதால் பொதுமக்களும், பயணிகளும் பெரிதும் பாதிக்கப்படுகின்றன. மேலும் டி. கல்லுப்பட்டி பேருந்து நிலையத்தில் போதிய அடிப்படை வசதிகள் இல்லை எனவும் பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.

எனவே மாவட்ட நிர்வாகம் உடனே தலையிட்டு சேதமாகி உபயோகம் இல்லாமல் கிடக்கும் இருக்கைகள் மற்றும் அடிப்படை வசதிகளை செய்துதரும்படி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!