17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » சாத்தூர் அருகே உள்ள நாயல்பட்டி கிராமத்தில் அனுமதியில்லாத பட்டாசு ஆலை விபத்து.. 2 குழந்தைகள் உள்பட 5 பேர் காயம் .

சாத்தூர் அருகே உள்ள நாயல்பட்டி கிராமத்தில் அனுமதியில்லாத பட்டாசு ஆலை விபத்து.. 2 குழந்தைகள் உள்பட 5 பேர் காயம் .

எழுதியவர்: ஆசிரியர் May 9, 2019, 12:54 pm

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே தாயில்பட்டியை அடுத்த கலைஞா காலனியை சேர்ந்த முனியசாமி என்பவருக்கு  சொந்தமான வீட்டில் அனுமதியின்றி சட்டவிரோதமாக பட்டாசு தயாரிக்கும் பணி நடைபெற்றுள்ளது . நேற்று (08/05/2019) மாலை பட்டாசு தயாரிக்கும் போது உராய்வின் காரணமாக வீட்டில் தீ பற்றி வெடி விபத்து ஏற்பட்டது . இந்த வெடிவிபத்தில் தீ மளமளவென பரவி அருகில் உள்ள வீடுகள் மற்றும் தகர செட்டில் தீ பற்றியது.

இத்தகவல் அறிந்து ராத்தூர் சிவகாசி செம்டம்போட்டை ஆகிய பகுதிகளில் இருந்து தீயணைப்பு படையினர் விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். சுமார் 3 மணி நேரத்துக்கும் மேலாக போராடி தீயை அணைத்தனர்.  இந்த தீ விபத்தில், மூன்று வீடுகள் மற்றும் தகர சீட்டு எரிந்து முழுவதும் எரிந்தது.   இந்த தீ விபத்தில்  கலைஞர் காலனி பகுதியை சேர்ந்த தர்ஷினி 5 கார்த்திகை லட்சுமி, விஜய வர்ஷினி, குருவ தாய், குருவம்மாள் ஆகிய 5 பேரும் காயம் அடைந்து தாயில்பட்டி தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு கண்காணிப்பாளர் ராஜராஜன் மற்றும் போலீசார் நேரில் வந்து விசாரணை நடத்தினர். மேலும் இந்த வெடி விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!