17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » அரசு பேருந்து ஓட்டுநர்களுக்கு சாலை விழிப்புணர்வு வகுப்பு..

அரசு பேருந்து ஓட்டுநர்களுக்கு சாலை விழிப்புணர்வு வகுப்பு..

எழுதியவர்: ஆசிரியர் May 8, 2019, 9:22 pm

மதுரை மாநகர போக்குவரத்து காவல் துணை ஆணையர் அருண் பால கோபாலன் இ.கா.ப.  உத்தரவுப்படி போக்குவரத்து காவல் துறையினர் பசுமலையில் அமைந்துள்ள தமிழ்நாடு அரசு போக்குவரத்து பணி மனையில் அரசு பேருந்து ஓட்டுநர்களுக்கு சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு வகுப்புகள் நடத்தினர்.

மேலும் மதுரை மாநகரில் இரண்டு சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு வாகனங்கள் உள்ளன. அந்த வாகனத்தில் ஒட்டப்பட்டுள்ள சாலை விபத்துக்கள் தொடர்பான பத்திரிக்கை செய்திகளை நேரடியாக காண்பித்தும் மற்றும் அது சம்பந்தமான சாலை பாதுகாப்பு விதிகளை ஓட்டுநர்கள் அனைவரும் பின்பற்ற வேண்டும் என்றும் மதுரை மாநகர போக்குவரத்து காவல்துறை சார்பாக கேட்டுக்கொள்ளப்பட்டது.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!