18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » கால்நடை குடிநீர் தொட்டியில் தண்ணீர் எங்கே?வீணடிக்கப்படுகிறதா மக்கள் பணம்?..

கால்நடை குடிநீர் தொட்டியில் தண்ணீர் எங்கே?வீணடிக்கப்படுகிறதா மக்கள் பணம்?..

எழுதியவர்: ஆசிரியர் May 8, 2019, 3:47 pm

பெரம்பலூர் மாவட்டத்தில் பல இடங்களில் கால்நடைகள் தண்ணீர் குடிப்பதற்காக அரசாங்கம் தொட்டிகள் கட்டியுள்ளது. ஆனால் கட்டிய நாள் முதல் இன்று வரை அந்த தொட்டியில் தண்ணீர் நிரப்பப்படாமல் காலியாகவே இருக்கிறது.

வறட்சி காலம் ஏற்பட்டுள்ளதால் ஆடு மாடுகள் காடுகளில் தண்ணீர் இல்லாமல் குடிப்பதற்கு வழியில்லாமல் மிகவும் சிரமப்படுவதை கருத்தில் கொண்டு கால்நடைகள் நலன் கருதி அரசாங்கம் இந்த தொட்டிகளை அமைத்துள்ளது.

ஆனால் இன்று வரை இந்த தொட்டியில் தண்ணீர் நிரப்பாமல் சம்பந்தப்பட்ட துறை காலம் கடத்தி வருகிறது. கால்நடைகள் குடிநீர் தொட்டியில் எப்பொழுது தண்ணீர் நிரப்புவார்களோ!!

செயல்படாத அரசின் திட்டங்கள் இதைப் போல் தான் வீணாகிக் கொண்டிருக்கின்றன. மக்கள் பணங்கள் தேவையில்லாத செலவுகளுக்கு செலவு செய்யப்படுகின்றன. இது மிகவும் வேதனை அளிப்பதாகவும்,தண்ணீர் நிரப்புவதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளும் மாவட்ட நிர்வாகம் துரிதமாக எடுக்க வேண்டும் எனவும் மக்கள் பாதை அமைப்பு சார்பில் சமூக ஆர்வலர் வெண்மணி வரதராஜன் கோரிக்கை விடுத்துள்ளார்.

செய்தியாளர்:- அபுபக்கர்சித்திக்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!