17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » நிலக்கோட்டை அருகே வனக்காவலர் கொலை வழக்கில் 5 பேர் கைது..

நிலக்கோட்டை அருகே வனக்காவலர் கொலை வழக்கில் 5 பேர் கைது..

எழுதியவர்: ஆசிரியர் May 8, 2019, 12:47 pm

நிலக்கோட்டை  அருகே வனக்காவலர்கள் கொலை வழக்கில் 5 பேர் கைது செய்யப்பட்டனர் மேலும் 2 பேரை தேடி வருகின்றனர். நிலக்கோட்டை அருகே உள்ள பட்டியைச் சேர்ந்த ராஜேந்திரன் வயது, 53 இவர் சிறுமலை வனச்சரகத்தில் வனக் காவலராக புரிந்து வருகிறார். சிறுமலை அடிவாரம் மாவூர் டேம இவருக்கு  சொந்தமான  தோட்டத்தில் அமர்ந்து நேற்று முன் தினம் ஏழு பேர் கொண்ட கும்பல் மதுபானம் குடித்து கொண்டிருந்தனர்.

மேலும் அவர்கள் தோட்டத்தில் மாங்காய் இளநீர் திருடியுள்ளனர்.  இதனைக் கண்டித்த ராஜேந்திரனை அந்த கும்பல் பீர் பாட்டிலால் குத்திக் கொலை செய்தனர். இதை தடுக்க  சென்ற   அவருடைய மனைவி சுந்தரவள்ளிக்கு படுகாயம் ஏற்பட்டுள்ளது.  இது தொடர்பாக அம்மையநாயக்கனூர் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

மேலும் கொலையாளிகளை பிடிக்க இன்ஸ்பெக்டர் லாவண்யா  தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. இந்த தனிப்படை போலீசார் அந்த பகுதியில் உள்ள தோட்டத்தில் பதுங்கி இருந்த 2 பேரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் விளாம்பட்டி அருகே உள்ள ஆவரம் பட்டியைச் சேர்ந்த சேதுபதி வயது 25, நிலக்கோட்டை அருகே சைய் நாயக்கன்பட்டியை சேர்ந்த ஆனந்து வயது 27  என தெரியவந்தது இவர்களுடன் சேர்ந்து 5 பேர் ராஜேந்திரனை கொலை செய்ததாக அவர்கள் தெரிவித்தனர் இதையடுத்து 2 பேரையும்  கைது செய்தனர். அவர்கள் கொடுத்த தகவலின் பேரில் இந்த கொலை வழக்கு தொடர்பாக ஆவரம் பட்டியைச் சேர்ந்த பால்பாண்டி 28, மதுரை மாவட்டம் வாடிப்பட்டியை சேர்ந்த நாச்சியப்பன் 27, ஆவரம் பட்டியைச் சேர்ந்த மருதுபாண்டி 25 ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

மேலும் இந்த  வழக்கில் தொடர்புடைய 2  பேரை  தீவிரமாக போலீசார்தேடி வருகின்றனர

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!