18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » சாக்கடைக்கழிவுகளை அப்புறப்படுத்தி பொதுக்கூட்டம் நடத்திய நாம் தமிழர் கட்சியினர்..

சாக்கடைக்கழிவுகளை அப்புறப்படுத்தி பொதுக்கூட்டம் நடத்திய நாம் தமிழர் கட்சியினர்..

எழுதியவர்: ஆசிரியர் May 8, 2019, 12:27 pm

திருப்பரங்குன்றம் அவனியாபுரம் மந்தை திடலில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் அக்கட்சியின் வேட்பாளர் ரா.ரேவதி அவர்களை ஆதரித்து வாக்கு சேகரிப்பதற்காக (7-05-2019 இரவு 7 மணி) அவனியாபுரம் மந்தை திடலில் பொதுக்கூட்டம் ஏற்பாடு செய்ப்பட்டு சீமான் எழுச்சியுரை ஆற்ற இருந்த நேரத்தில் அரைமணி நேரத்திற்கு மேலாக அப்பகுதியில் காற்றுடன் கூடிய கனமழை பெய்தது.

மழை நீர் வடிந்து செல்ல வாய்க்கால் வசதி சரிவர இல்லாததால் அப்பகுதியில் உள்ள குப்பைகள் மற்றும் திடக்கழிவுகள் சாக்கடைக்குள் சென்று அடைப்பு ஏற்பட்டு சாக்கடை நிரம்பி வடிந்து மழை நீரால் அடித்து செல்லப்பட்டு மந்தை திடல் முழுவதும் பரவிக்கிடந்தது. இதனால் துர்நாற்றம் வீசிய நிலையில் கூட்டத்திற்கு வந்த அக்கட்சி நிர்வாகிகள் உடனடியாக குப்பை, மதுபாட்டில்களை அகற்றி சுத்தம் செய்த பிறகு பொதுக்கூட்டத்தில் சீமான் பேசினார்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!