17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » 5 அடி பள்ளத்தில் இறங்கி சார்ஆட்சியர் வாகனம்….உயிர் தப்பிய சார்ஆட்சியர்..

5 அடி பள்ளத்தில் இறங்கி சார்ஆட்சியர் வாகனம்….உயிர் தப்பிய சார்ஆட்சியர்..

எழுதியவர்: ஆசிரியர் May 7, 2019, 1:31 pm

நெல்லை மாவட்டம் சேரன்மகாதேவி சார்-ஆட்சியர் ஆகாஷ் சென்ற வாகனம் மீது அரசுப்பேருந்து மோதியதில் சார்-ஆட்சியர் அதிர்ஷ்டவசமாக காயமின்றி உயிர் தப்பினார். சேரன்மகாதேவி சார்ஆட்சியர் ஆகாஷ் ஞாயிற்றுக்கிழமை அன்று ஜீப்பில் பாளையங்கோட்டைக்கு சென்றுள்ளார்.

மேலச்செவல் பேருந்து நிறுத்தம் அருகே சென்றபோது முன்னால் சென்ற பேருந்தை ஜீப் முந்திச் சென்றதாகவும், அப்போது சாலையின் குறுக்கே ஒருவர் வந்ததால் ஜீப் ஓட்டுநர் திடீரென பிரேக் பிடித்ததாகவும் தெரிகிறது. இதன் காரணமாக அரசுப் பேருந்து சார்ஆட்சியரின் ஜீப் மீது உரசியதில் ஜீப் நிலை தடுமாறி சாலையிலிருந்து சுமார் 5 அடி பள்ளத்தில் இறங்கியதாக கூறப்படுகிறது.

இதில் சார்ஆட்சியர் எந்த வித காயமுமின்றி உயிர் தப்பியதோடு இந்த சம்பவத்தை அடுத்து ஜீப்பை மீண்டும் சாலைக்குக் கொண்டு வந்து சார்- ஆட்சியர் அதே ஜீப்பில் பாளையங்கோட்டை சென்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

செய்தியாளர்:- அபுபக்கர்சித்திக்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!