17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » திண்டுக்கல் அருகே வனக்காவலர் மற்றும் அவருடைய மனைவி கொலை கும்பலால் தாக்கப்பட்ட சம்பவத்தில் வனக்காவலர் பலி…

திண்டுக்கல் அருகே வனக்காவலர் மற்றும் அவருடைய மனைவி கொலை கும்பலால் தாக்கப்பட்ட சம்பவத்தில் வனக்காவலர் பலி…

எழுதியவர்: ஆசிரியர் May 6, 2019, 7:57 pm

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை பள்ளபட்டியை சேர்ந்தவர் ராஜேந்திரன் அவரது மனைவி சுந்தரவல்லி ராஜேந்திரன் தமிழக வனத்துறையில் வன காவலராக வேலை பார்த்து வருகிறார்.

இந்நிலையில் இன்று அவரும் அவரது மனைவியும் பள்ளபட்டி சிப்காட் பகுதியில் உள்ள அவர்களது தோட்டத்திற்கு சென்று உள்ளனர். இந்நிலையில் 8 பேர் கொண்ட கும்பல் அவரது தோட்டத்தின் அருகே மது அருந்தியுள்ளனர். அதனை தட்டிகேட்ட வன காவலர் ராஜேந்திரன் அவரது மனைவியையும் பீர் பாட்டில் மற்றும் கற்கலால் குத்தியுள்ளனர். இதில் வனக்காவலர் ராஜேந்திரனுக்கு பலத்த காயம் ஏற்பட்டு ரத்தவெள்ளத்தில் துடிதுடித்து அதே இடத்தில் பலியானார். அவரது மனைவி பலத்த காயத்துடன் நிலக்கோட்டை அரசு அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த அம்மையநாயக்கனூர் போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!