17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » மாணவிகளை தொடர்ந்து பலி வாங்கும் “நீட்” தேர்வு…

மாணவிகளை தொடர்ந்து பலி வாங்கும் “நீட்” தேர்வு…

எழுதியவர்: ஆசிரியர் May 6, 2019, 12:34 pm

2017ம் ஆண்டு 1176 மதிப்பெண்கள் பெற்றுப் “நீட்” எனும் கோரப்பிடியினால் தன் கனவுகளை உடைத்து உயிரை நீத்து கொண்ட மானவி அனிதா.

இந்த 2019ம் வருடம் ராமநாதபுரம் மாவட்டம் கமுதி சேர்ந்த மாற்றுத்திறனாளி மாணவி சந்தியாவை பலி வாங்கியுள்ளது நீட் தேர்வு.  மதுரையில் நீட் தேர்வு எழுதிய மாற்றுத்திறனாளி வீட்டுக்கு செல்லும்போது திருப்புவனம் அருகே மயங்கிவிட்டார். இதற்கு காரணம் நீட் தேர்வினால் ஏற்பட்ட மன உளைச்சல் தவிர வேறு எதுவும் இருக்க முடியாது.

பின்  உடனடியாக 108 வாகனம் மூலமாக மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார் மாணவி,  ஆனால் வழியிலேயே மாணவி இறந்து விட்டார் என மருத்துவர்கள் தெரிவித்தனர்.  நீட் தேர்வு எழுதி வீடு திரும்பிய மாணவி உயிரிழந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  பின்னர் மாணவியின் உடல் பிரேத பரிசோதனைக்கு பிறகு பெற்றோர்களிடம் உடல் ஒப்படைக்கப்பட்டது.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!