18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » தொப்புள்கொடி அறுக்காத நிலையில் குப்பையில் கிடந்த குழந்தை மீட்பு..!

தொப்புள்கொடி அறுக்காத நிலையில் குப்பையில் கிடந்த குழந்தை மீட்பு..!

எழுதியவர்: ஆசிரியர் May 4, 2019, 10:35 pm

சிவகாசி அருகே, தொப்புள்கொடி கூட அறுக்காத நிலையில் குப்பையில் கிடந்த பச்சிளம் பெண் குழந்தையை பொதுமக்கள் மீட்டு, சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் அனுமதித்துள்ளனர்.

இதுகுறித்த விவரம் வருமாறு; விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள ஏ.லட்சுமியாபுரம் ரயில்வே கேட் அருகே குப்பை கொட்டும் இடம் உள்ளது. அந்த இடத்தில் கிடந்த ஒரு பையில் இருந்து, பச்சிளம் குழந்தையின் அழுகுரல் கேட்டுள்ளது. அந்த வழியாகச் சென்றவர்கள் இதை கவனித்து, பையை திறந்து பார்த்துள்ளனர். பையின் உள்ளே, பிறந்து சில மணி நேரமே ஆன பெண் குழந்தை ஒன்று, தொப்புள்கொடி கூட அறுக்காத நிலையில் இருந்துள்ளது.

இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர்கள், இதுகுறித்து சிவகாசி டவுன் போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து, அந்த குழந்தையை சிவகாசி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்று, அங்கிருந்த டாக்டர்களிடம் நடந்த விவரங்களைக் கூறி குழந்தைக்கு சிகிச்சை அளிக்க கேட்டுக் கொண்டனர். இதைத் தொடர்ந்து, பிரசவ சிகிச்சைப் பிரிவில் குழந்தை அனுமதிக்கப்பட்டது.

‘பிறந்த சில மணி நேரத்திலேயே பெண் குழந்தையை பையில் வைத்து குப்பையில் போட்டுச் சென்ற கல்நெஞ்சம் படைத்தவர்கள் யார்..? அந்தக் குழந்தையின் தாய் எங்கே..?’ என்பது குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றர். இந்த சம்பவம் அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!