17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » நிகழ்வுகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » இந்தியன் ரெட் கிராஸ் ராமநாதபுரம் கிளையின் புரவலர் அரசு மருத்துவமனைக்கு குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரம் அன்பளிப்பு..

இந்தியன் ரெட் கிராஸ் ராமநாதபுரம் கிளையின் புரவலர் அரசு மருத்துவமனைக்கு குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரம் அன்பளிப்பு..

எழுதியவர்: ஆசிரியர் March 20, 2017, 5:36 pm

இந்தியன் ரெட் கிராஸ் ராமநாதபுரம் கிளையின் புரவலர் & பத்திர எழுத்தர் என். ராமநாதன் பெருங்குளம் மருத்துவமனைக்கு குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரம் அன்பளிப்பாக வழங்கினார்.

இந்நிகழ்ச்சி 19.03.17 ஞாயிறு காலை 10.30 மணிக்கு அரசு மருத்துவமனையில் நடைபெற்றது. இயந்திரத்தை இந்தியன் ரெட் கிராஸ் என். ராமநாதன் இயக்கி துவங்கி வைத்தார். மேலும பெருங்குளம் அரசு மருத்துவமனைக்கு முதன் முதலாக பெயர்ப்பலகை செய்து வைக்கப்பட்டது. இதனை ராமநாதபுரம் ரெட் கிராஸ் துணைத் தலைவர்.அஸ்மாபாக் அன்வர்தீன் மற்றும் என். ராமநாதன் ஆகியோர் திறந்துவைத்தனர்.

இந்நிகழ்வில் சேர்மன் ஏ. சண்முக ராஜேஸ்வரன், துணைச் சேர்மன் எஸ். ஹாரூன், பொருளாளர் சி. குணசேகரன், ஆயுட்கால உறுப்பினர் எஸ். பிரேம் நசீர், ரெட் கிராஸ் மருத்துவர் எஸ். சுந்தரராஜன், ஆய்வக உதவியாளர் ஜோதி பிரேம் நசீர் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!