17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » நெல்லை சந்திப்பு பேருந்து நிலையம் அருகே கடும் போக்குவரத்து நெரிசல்-வாகன ஓட்டிகள் அவதி..

நெல்லை சந்திப்பு பேருந்து நிலையம் அருகே கடும் போக்குவரத்து நெரிசல்-வாகன ஓட்டிகள் அவதி..

எழுதியவர்: ஆசிரியர் May 4, 2019, 1:34 am

நெல்லை சந்திப்பு பழைய பேருந்து நிலையம் ரூ.78½ கோடி நிதி செலவில் புதுப்பிக்கப்பட்டு மூன்று அடுக்குகளாக தற்போது கட்டப்பட்டு வருகிறது. இதன் காரணமாக ஜங்ஷன் பஸ் நிலையத்தின் உட்பகுதி மூடப்பட்டு கட்டுமான பணிகளுக்காக கட்டுமான நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து நெல்லை ஜங்ஷன் பேருந்து நிலையத்தை சுற்றி உள்ள சாலையிலேயே பேருந்துகள் அனைத்தும் தற்காலிகமாக நிறுத்தப்பட்டு வருகிறது. இதனால் ஏற்பட்ட கடும் போக்குவரத்து நெருக்கடியால் நெல்லை-தென்காசி இடையே இயக்கப்படும் பேருந்துகள் சந்திப்பு பேருந்து நிலைய பகுதிக்குள் நுழைவதற்கு தடை விதிக்கப்பட்டது. இருந்த போதிலும் கூட போக்குவரத்து வாகன நெரிசல் குறைந்தபாடில்லை.

இதையடுத்து மதுரை சாலையில் போலீஸ் சிக்னல் அருகில் இருந்த தடுப்புகள்(பேரிகார்டுகள்) அகற்றப்பட்டு சந்திப்பு ரெயில் நிலையத்தில் இருந்து வெளியே வருகிற பகுதியில் கார் உள்ளிட்ட வாகனங்கள் வெளியே செல்ல தற்காலிகமாக வழி ஏற்படுத்தப்பட்டது. ஆனாலும் நெல்லையில் வாகனங்கள் தினமும் போக்குவரத்து நெரிசலில் சிக்கி திணறி வரும் அவல நிலையே தொடர்கிறது.

கடும் வெயிலில் வாகன நெரிசல் காரணமாகவும்,பரபரப்பு மிக்க காலை நேரங்களில் அந்த வழியே வாகனங்களை ஓட்டி செல்வதற்குள் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். இதற்கு விரைவில் தீர்வு காண வேண்டுமென வாகன ஓட்டிகள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

செய்தியாளர்:- அபுபக்கர்சித்திக்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!