18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » திண்டுக்கல் மாநகராட்சி பகுதியில் பல நாட்களாக குடி தண்ணீர் வராததை கண்டித்து பொதுமக்கள் சாலைமறியல்…

திண்டுக்கல் மாநகராட்சி பகுதியில் பல நாட்களாக குடி தண்ணீர் வராததை கண்டித்து பொதுமக்கள் சாலைமறியல்…

எழுதியவர்: ஆசிரியர் May 3, 2019, 10:20 pm

திண்டுக்கல் மாநகராட்சி 1-வது வார்டு பழநி ரோடு கருணாநிதி நகர் பகுதியில் பல நாட்களாக குடி தண்ணீர் வராததாலும் மாநகராட்சி அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும், அதை அதிகாரிகள் அலட்சியப்படுத்திய மெத்தன போக்கை கண்டித்தும் பழநி சாலையில் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இதனால், பழநி சாலையில் சுமார் அரை மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால் பயணிகளும் வாகன ஓட்டிகளும் மிகுந்த சிரமத்திற்க்கு ஆளாகினர். அவ்வழியே வந்த திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சம்மந்தப்பட்ட மாநகராட்சி அதிகாரிகளிடம் பேசி முறையாக குடிதண்ணீர் வருவதற்கான ஏற்பாடு செய்தபின்பு மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள் கலைந்து சென்றனர் .

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!